நளினியின் முன்கூட்டிய விடுதலை மனுவை ரத்து செய்யுமாறு கோரிக்கை..

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருகின்ற நளினி முருகன் தாக்கல் செய்துள்ள முன்கூட்டிய விடுதலை மனுவை ரத்து செய்யுமாறு, தமிழக அரசாங்கம் சென்னை மேல் நீதிமன்றை கோரியுள்ளது.

அவர் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கான அமைச்சரவை தீர்மானத்தை தமிழக அரசாங்கம் மேற்கொண்டிருப்பதுடன், அந்த தீர்மானம் தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவா் விடுதலைக்கு விண்ணப்பிக்க முடியாது என்று தமிழக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும்இ 2018ம் ஆண்டு இந்த அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதும், ஆளுநர் இன்னும் எந்த தீர்மானத்தையும் அறிவிக்கவில்லை.

நளினி உள்ளிட்ட 7 பேரும் 28 வருடங்களாக சிறையில் உள்ளனர்.

கடந்த மாதம் நளினுக்கு 30 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருப்பதுடன், இந்த மாதம் 26ம் திகதியுடன் அந்த விடுமுறை நிறைவடையுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb