நாளாந்தம் வேலைக்கு செல்வதற்கு சபையின் உந்துருளியை பயன்படுத்தும் பளை தவிசாளர்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி  பிரதேசசபை தவிசாளர்  நாளாந்தம் வேலைக்கு வந்து செல்வதற்கு உள்ளிட்ட தனது சொந்த  தேவைகளுக்கு  சபையின  உந்துருளியை முழுமயாக பயன்படுத்தி வருகின்றார் என சபையின் எதிர் தரப்பு உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
NP BAD – 3323 எனும் இலக்கத்தை உடைய உந்துருளி கடந்த 2011 ஆண்டுக் காலப்பகுதியில் சபையின் ஊழியர்கள் அலுவலகத் தேவைக்கு பயன்படுத்துவதற்கு என கொள்வனவு  சபையின் திரண்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டது. ஆனால் குறித்து உந்துருளி தற்போது  தவிசாளரின் சொந்த தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அலுவலக தேவைகள் கருதி பயன்படுத்துவதற்கு  உந்துருளி  அலுவலகத்தில் காணப்படுவதில்லை என பிரதேச சபையின் ஊழியர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் அனுப்பி வைக்கப்பட்ட சுற்று நிருபம்  ஒன்றுக்கு அமைவாக தவிசாளர்கள் அலுவலக வாகனங்களை சொந்த தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   இருப்பினும் பளை தவிசாளர் நாளாந்த வேலைக்கு வந்து செல்வதற்கு உட்பட தனது தேவைகளுக்கு  முழுமையாக  பயன்படுத்தி வருகின்றார். எனவும். அவர் பட்டதாரி பயிலுநராக கரைச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வருகின்றார். எனவே ஒவ்வொரு நாளும் பளையிலிருந்து கரைச்சிக்கு சபையின்  உந்துருளியிலேயே  வந்து செல்கின்றார் எனவும்    பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனை தொடர்பு கொண்டு வினவிய போது தான் அவ்வாறு எந்த வாகனத்தையும் பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்தார். ஆனால் இன்றையதினம்(15) கரைச்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வாகனத் தரிப்பிடத்தில் NP BAD – 3323 எனும் இலக்கத்தை உடைய பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு சொந்தமான உந்துருளி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்க முடிந்துள்ளது.
Share:

Author: theneeweb