கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியால் 31 ஆயிரம் பேர் பாதிப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்

 

தற்போது நிலவி வருகின்ற வறட்சியான காலநிலை  காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 8ஆயிரத்து 839 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரம்  பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகபிரிவுகளிலும் 50 கிராமசேவையாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட மாவட்ட செயலாளர், , பூநகரி, கரைச்சி பிரதேச செயலகபிரிவுகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும்,பூநகரி பிரதேச செயலகபிரிவில் 20இற்கும் மேற்பட்ட கிராமசேவையாளர் பிரிவுகளிலும், கரைச்சிபிரதேச செயலகபிரிவில் 15 இற்கும் மேற்பட்டகிராம சேவையாளர் பிரிவுகளிலும் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக அடிப்படைத் தேவையான குடிநீர் விநியோகத்தினை இயன்றளவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக மேற்கொண்டு வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு வறட்சிகாரணமாக குளங்களின் நீர் மட்டங்களும் குறைந்துள்ளது  க வட மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய குளமான  இரணைமடுக் குளத்தைப் பொறுத்தவரையில் 36 அடிகொள்ளளவைக் கொண்ட ஆனால் தற்போது தற்போது 9 அடிமட்டத்தில் நீர் காணப்படுகிறது.
மேலும் கிளிநொச்சி நகரையும், அதனை அண்டியப் பகுதிகளிலும்  நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் விநியோகிப்படுகின்ற குடி நீரானது இரணைமடு குளத்திலிருந்து கிளிநொச்சி குளத்திற்கு நீர் பெறப்பட்டு அங்கிருந்தே சத்திகரிக்கரிக்கப்பட்ட நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தவறட்சி தொடருமாக இருந்தால் குடிநீர் வழங்குவதும் சிரமமாக இருக்கும். இரணைமடுக் குளத்தை நம்பி விவசாயம் செய்த கமக்கார அமைப்புகள் சில தங்களுடைய நெற்பயிர்ச் செய்கைக்கான நீரை பெற்றுக் கொள்வதில் மும் முரமாகவுள்ளனர். இக்கட்டான ஒரு சூழலில் நெற்பயிர்களுக்கு நீரைவழங்குவது ஒருகட்டாயதேவையாகவுள்ள அதேநேரம், குடிநீர் தேவைக்கும் நீரைவழங்க வேண்டிய சந்தர்ப்பத்திலேயே எவ்வாறு நீரை முகாமைத்துவம் செய்வதுஎன்பதில் நாம் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம்.
அத்தியாவசிய தேவையாக காணப்படும் குடிநீருக்கான விநியோகத்தில் நாம் அக்கறையாக இருக்கின்றோம். இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் எந்தவொருசந்தர்ப்பத்திலும் 8 அடிக்குகுறைவாக இருக்குமேயானால் குடிநீருக்கு பயன்படுத்துவதில் பெரும் சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும். அதன் காரணமாக நாம் குளத்தில் இருந்து நீரைபயிர்ச் செய்கைக்கு விடுவிப்பது என்பது தொடர்பாக இணக்கப்பாட்டை எட்டவில்லை. என்றாலும் தொடர்ச்சியாக கமக்கார அமைப்புகள் தமது வேண்டு கோளை முன்வைத்து வருகின்றார்கள். இந்த நிலைமையில்தான் தற்போதுநாம் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். மழைபெய்தால் இந்தபிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ளமுடியும் என்கின்ற நம்பிக்கை உள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
Share:

Author: theneeweb