எந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விக்னேஸ்வரன் போட்டியிட்டால் கூட்டமைப்புக்கு கிடைக்கும் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்காமல் போகும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், விக்னேஸ்வரன் போட்டியிட்டால் கூட்டமைப்பிற்கு கிடைக்கும் வாக்குகள் குறிப்பித்தக்களவு குறைவடையும் எனவும் கூறினார்.

எனவே, விக்னேஸ்வரன் போட்டியிட்டால் பொதுஜன முன்னணியின் வாக்கு வங்கி குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் வினேஸ்வரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போது சமூகத்தில் கதையொன்று மாத்திரமே நிலவுவதாகவும் அவர கூறினார்.

இதேவேளை, தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவித நன்மையும் கிடைக்க போவதில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், எந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Author: theneeweb