கோட்டாவிற்கு தமிழ் மக்களின் வாக்குகள் கிடைப்பது கடினம்

தமிழ் மக்களின் வாக்குகள் கிடைப்பது மிகக் கடினம் என தான் கோட்டாவிடம் தெளிவாக எடுத்து கூறியுள்ளதாக புளோட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தன் கடந்த வாரத்தில் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளாரர்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சித்தார்தன், ஜனாதிபதியாவதற்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவது அவசியம் என கோட்டாபய கூறியதாகவும் தெரிவித்தார்.

அதற்கமைய வெகுவிரைவில் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பை சந்திக்க விரும்புவதாக கோட்டாபய கூறியதாகவும் தெரிவித்தார்.

மொத்தத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு யார் தீர்வை வழங்க போவதாக கூறுகின்றாரோ அவர்களுடனும் பேச்சசுவார்த்தை நடத்த தயார் எனவும் குறிப்பிட்டார்.

வெறுமனே தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டிருப்பதால் நம்பிக்கையில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியுடனும் பேசி பார்த்து முடிவு எடுக்க உள்ளதாகவும் சித்தார்தன் கூறியுள்ளார்.

Author: theneeweb