வவுனியா தலைமை காரியால வழிகாட்டி பெயர் பலகை உடைத்தெறியப்பட்டது மனவேதனை

கடந்த வெள்ளிக்கிழமை இரவு எமது ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட தலைமை காரியாலயத்திற்கு வவுனியா நகர சபையின் அனுமதியுடனாக பொறுத்தப்பட்டிருந்த வழிகாட்டி பெயர் பலகை சில விசமிகளால் தகர்த்தெறியப்பட்டுள்ளது மனவேதனை அளிக்கின்றது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் இது சம்பந்தமாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டிருக்கின்றது எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்ததாவது, வவுனியா நகர சபை அனுமதியுடன் நாம் பொறுத்தியிருந்த இந்த வழிக்காட்டி பலகையின் ஊடாக பலர் நன்மைகளைப் பெற்று வருகின்றார்கள். வவுனியா நகரிலிருந்து சுமார் 1 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள எமது அலுவலகத்தை கண்டுபிடித்து வர முடியாத நிலையில் மக்கள் இருந்த பொழுது இவ் வழியாட்டி பெயர்பலகைகள் ஹொரப்பத்தன பிரதான வீதியிலும் ஒழுங்கைக்குள்ளும் பொறுத்தப்பட்டிருந்தன.

இதனூடாக அண்மைக்காலமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் எனது அலுவலகத்திற்கு வந்து தமக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். குறிப்பாக பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு கல்விக்காக செலவிட முடியாத நிலையில் எனது அலுவலகத்திற்கு வந்து கற்றல் உபகரணங்களும் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதற்கான ஏனைய உதவியினையும் பெற்று செல்கின்றனர். கடந்த ஒரு வருடகாலமாக சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொந்த நிதியிலிருந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை நான் வழங்கி வருவது வன்னி மாவட்ட அனைத்து மக்களும் அறிவார்கள்.

இவ்வறான நிலையில் மக்களுக்கு வழிட்டியாக இருந்த இப்பெயர் பலகையை தகர்த்தெறிவதன் ஊடாக பிரபா கணேசனை அழித்து விட முடியும் என்று நினைக்கின்றார்கள். ஆனால், இவர்களது செயல்பாட்டின் ஊடாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் கல்விக்கான உதவியினையே இவர்கள் தகர்த்தெறிந்துள்ளார்கள் என்பதனை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் செயல்பாட்டினால் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை எளிய பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளுமேயாகும்.

இவ்வாறான வன்முறை சம்பவங்களை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். கோழைகள் போல் நள்ளிரவில் இவ்வாறான அடாவடித்தனத்தை செய்பவர்களை நேரடியாக சந்திக்க நான் தயாராக இருக்கின்றேன். இன்று இதனை கேள்விப்பட்ட பல நூற்றுக்கணக்கான எமது இளைஞர் அணி தோழர்கள் வெகுண்டு எழுந்துள்ளார்கள்.

இவர்களை சமாளிப்பது இன்று சிரமமான காரியமாக எனக்குள்ளது. வன்முறைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். மாறாக நேர்மையான, ஊழலற்ற, மக்கள் பால் அன்பு கொண்ட எனது அரசியலுடன் இணைந்து செயல்பட வருமாறு என்னை எதிரியாக நினைப்பவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb