ரணிலை நோக்கிக் காட்டமானகடிதம்

பிரதமர் அவர்களே!
கோதபய ராஜபக்ஸவை நீங்கள் பாதுகாக்குறீர்கள்!
எனதுதந்தைக்குஎப்போதாவதுநீதிகிடைக்குமா?

கொலைசெய்யப்பட்ட‘சன்டேலீடர்’பத்திரிகைஆசிரியரின் மகள் பகிரங்ககடிதம்.
( வாசகர் நலன் கருதிதமிழில் தரப்படுகிறது.)
மொழியாக்கம் : வி.சிவலிங்கம்

பிரதமர் அவர்களே!
நேற்றையதினம் நீங்கள் நிகழ்த்தியஅரசியல் உரையின்போதுஎனதுதந்தையும், கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதிபடுகொலைசெய்யப்பட்டஉங்கள் நெருங்கியநண்பருமானலசந்தாவிக்ரமதுங்கதொடர்பாகபிரஸ்தாபித்திருந்தீர்கள்.
ஜனாதிபதிபதவியைக் கோரும் கோதபய ராஜபக்ஸ தாம் அச்சமற்றசூழலை உருவாக்குவதாக கூறும் வேளையில்,எனதுதந்தையின் படுகொலைக்கும்,மற்றும் பலகொடுமைகளுக்கும் மன்னிப்புக் கோருவாரா? எனக் கேட்டிருந்தீர்கள்.

உங்கள் இதயம் ஆறுதலடையும் வகையில் சிலவற்றைக் கூறுகிறேன். எனதுதந்தையின் படுகொலைக்காகஅவர் ஒருபோதும் மன்னிப்புக் கோரமாட்டார். கடந்த 10 வருடங்களுக்குமேலாகதொலைக் காட்சிகளில் தாம் இவைபற்றிப் பெருமைகொள்வதாகவேதெரிவித்துவந்தார். மன்னிப்புக் கோருவதில்லைஎன்ற அளவிற்குஅவர் தனதுஎண்ணத்தைமாற்றிக் கொண்டுள்ளார்.

பிரதமர் அவர்களே!

உங்கள் தரப்பில் நடந்ததுஎன்ன?கடந்தநான்குஅரைஆண்டுகளாகநீங்கள் குறிப்பிடும் பாரியகொலைகாரருடன் பழகியும்,பாதுகாத்தும் வந்தீர்களே! அதற்காகநீங்கள் மன்னிப்புக் கோருவீர்களா? எனதுதந்தைமரணித்தநாள் முதல் வாக்குகளைப் பெறுவதற்காகஅவர் பெயரைப் பயன்படுத்தினீர்கள். அவரின் படுகொலையை 2015ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் பயன்படுத்தியதால் பிரதமர் பதவியைஅடைந்தீர்கள். எனதுதந்தையின் மரணத்திற்குநீதிபெற்றுத் தருவதாகக் கூறிமைத்திரியை ஜனாதிபதியாகவும்,பாராளுமன்றத்தை ஐ தே கட்சிகட்டுப்படுத்தவும் வாய்ப்புப்பெற்றீர்கள்.

அதிகாரத்திற்குவந்தவுடனேயேஉங்கள் தெரிவுகளில் மாற்றம் ஏற்பட்டன. 2015ம் ஆண்டுபெப்ரவரிமாதம் நான் உங்களைஅலரிமாளிகையில் சந்தித்தபோதுஎனதுதந்தையின் கொலையாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்குஎனக்குஆதரவுதருமாறுகோரினேன். அப்போதுவேறுபிரச்சனைகளுக்குமுன்னுரிமைவழங்கவேண்டியநிலையில் இருப்பதாகவும்,நீதிஎன்பதுலசந்தாவின் பிரச்சனைக்கானதாகமட்டுமல்லஎன்றீர்கள்.
உங்களின் முன்னுரிமை எவை? என்பதைநான் காண்கிறேன். பொலீஸ் பிரிவுஉங்கள் பிரதானஅதிகாரிகளின் கைகளில் இருந்தபோதிலும்,கோதபயவைநீதிமுன் நிறுத்தவில்லை. ‘மிக்’விமானப் பிரச்சனையைநிருபிப்பதுஎனதுதந்தையின் கொலையைஅறிவதில் முக்கியபங்கைவகிக்கிறது. ஆனால் உங்கள் பார்வையிலேயேநிதிதொடர்பானவிசாரணைக்குழுவின் ஊழல் மிக்கஅதிகாரி‘மிக்’விமான ஊழல் விசாரணையில் கோதாவைத் தவிர்த்தேவிசாரணைகளைமேற்கொண்டார்.

தற்போதுதேர்தல் என்பதால் நீங்கள் அவரைக் கொலைகாரர் எனப்பகிரங்கமாகத்தாக்குகிறீர்கள். அவ்வாறுநீங்கள் மேற்கொள்ளும்போதுஉங்கள் பிரதானஅதிகாரியாகியசாகலரத்னாயகவும், இதரஅமைச்சர்களும் கோதபயவின் இல்லத்தில் பலமணிநேரங்களைச் செலவளித்துள்ளனர். உங்கள் அரசுஒழுங்கற்றவிதத்தில் அடையாளஅட்டைகளையும்,கடவுச் சீட்டுகளையும் வழங்கியதோடு,உங்கள் மூத்தஉதவியாளர்களும்,மருமகளும் பகிரங்கமாகவேசமூகவலைத் தளங்களில் கோதபயவிற்குஆதரவுப் பிரச்சாரங்களைமேற்கொள்கின்றனர்.
நீங்கள் கொலையாளிகள் எனக் கூறுபவர்களைநீங்களும்,உங்கள் அதிகாரிகளும் இவ்வாறேநடத்துகின்றனர். இருப்பினும் எனதுதந்தையின் கொலைதொடர்பானவிசாரணைகளைநடத்தும் உளவுத் துறையினருக்குஉதவிகள் தேவைப்படுகின்றன. ஆனால் நீங்கள் அதற்குஅருகாமையில் ஒருபோதுமேகாணப்படவில்லை.
இந்தவிசாரணைகளில் ராணுவமும்,உளவுத்துறையினரும் ஒத்துழைக்கமறுத்தபோதுபிரதமர் அவர்களே! நீங்கள் எங்கிருந்தீர்கள்? மிகமுக்கியதகவல் தருபவர் ஒருவருக்குகோதபயவிடமிருந்துபாதுகாப்புத் தேவைஎனத்தெரிவிக்கப்பட்டபோதுநீங்கள் என்னசெய்தீர்கள்? எனதுதந்தையின்

கொலைதொடர்பாகவிசாரணைகளைமேற்கொண்டபிரதானஅதிகாரி இன்ஸ்பெக்டர் நிசாந்தசில்வாஉளவுத்துறையிலிருந்து ஜனாதிபதியால் உதைத்துவெளியேற்றப்பட்டபோதுநீங்கள் அதனைமறுத்துவிரலைக்கூடஅசைக்கவில்லையேஏன்?
பலமாதங்கள் கடந்துவிட்டநிலையில் உங்கள் சட்டமாஅதிபர் கோதபய ராஜபக்ஸ,திரிப்போலிகொலைக்குழுஆகியவைசம்பந்தப்பட்டவிசாரணைகளை மூடும்படிதள்ளப்பட்டுள்ளதோடு,அவற்றை மூடி மறைத்துமிகவும் கீழேயுள்ளஅதிகாரிகள் மீதுகுற்றங்களைச் சுமத்தமுயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பத்திரிகையாளர் எக்னாலியகொடவிசாரணையில் கோதபயதான்கடத்துவதற்குஉத்தரவிட்டார் என்பதை இரண்டுஅதிகாரிகள் ஏற்றுக்கொண்டநிலையில் கோதபயவைஅதிலிருந்துவிலக்கமுயற்சிகள் எடுக்கப்பட்டன. சத்தியப் பிரமாணம் செய்துசாட்சியமளித்தநிலையிலும் அதன் அடிப்படையில் கோதபய ராஜபக்ஸவை விசாரணைகூடசெய்யவில்லை. நான்குமோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் உபாலிதென்னக்கோன் மீதுதாக்குதல் நடத்தியபோதிலும், இரண்டுகீழ் நிலைஅதிகாரிகளேதண்டிக்கப்பட்டனர். ராஜபக்ஜவும்,திரிபொலிகொலைக்குழுவும் தண்டனையிலிருந்துதப்பினர். இதுதொடர்பாகபொறுப்புக் கூறுவதற்குஅர்த்தமுள்ளநடவடிக்கைஏதாவதுஎடுக்கஉங்களால் முடிந்ததா?
பதிலாகஉங்கள் குடும்பமும்,உயர் அதிகாரிகளும் கோதபய ராஜபக்ஸவுடன் நெருக்கமானஉறவுகளைஅதிகரிக்கும்போது,நீங்கள் மிகவும் உவகையுடன் பகிரங்கமாககொலைகாரர்கள் என்கிறீர்கள். நீங்கள் ஜனாதிபதியாகஅல்லதுதொடர்ந்துபிரதமராகவந்தாலும்,கோதபய ராஜபக்ஸ தொடர்ந்தும் உங்கள் முன்னிலையில் மகிழ்சியாகவேவலம்வருவார் என்பதுஎனநிச்சயம் நம்புகிறேன்.
எனதுதந்தையின் கொலைக்குக் காரணமாக இருந்தவர் தற்போது ஜனாதிபதிவேட்பாளராகஉயர்த்தப்பட்டுள்ளார். அவருக்குஎதிராகபோட்டியிடுபவர் நேர்மையானவராகவும்,நீதியைநிலைநாட்டுபவராகவும்,சட்டத்தின் முன் சகலரையும் ஒரேவிதமாகநடத்துபவராகவும்,முதிர்ச்சியும்,பொறுப்பும் மிக்கதைரியமுள்ளஒருவராகஅமையவேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். தனதுகட்சியின் நலன்களுக்காகஅல்லதுதனதுசொந்தநலனுக்காகபின்கதவுஒப்பந்தங்களைத் தனதுகோட்பாடுகளைவிட்டுக் கொடுத்துகட்சிக்கும்,நாட்டிற்கும் கேடுவிளைவிக்கும் ஒருவராகஅமையக்கூடாதுஎனப் பிரார்த்திக்கிறேன்.

எனதும்,கடந்தகாலவெள்ளைவான் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுத் தப்பியுள்ளவர்களின் சார்பாகஎன் இறுதிநம்பிக்கையைவெளிப்படுத்தவிரும்புகிறேன்.
அரசாங்கம் அமைக்கும் பட்சத்தில் நீதியைஉறுதிசெய்பவராகவும்;,பாதிக்கப்பட்டமக்களின் துன்பங்களைப் பாவித்துத்தேர்தலில் வெற்றிபெறமுயற்சிக்காதஒருவராகவும், இன்றுகொலைகாரர் எனக் கூறிய பின் அவர்களைத் தனதுஉத்தியோககாரியாலயத்தில் வரவேற்பவராகவும் இல்லாதஒருவரேகோதபயவிற்குஎதிராகப்போட்டியிடவேண்டும் எனநம்புகிறேன்.
சாதாரணமாகக் கூறுவதானால் இந்தநாடுஉங்களின் மீட்சியிலும்,உங்களின் புதியநண்பர் கோதபயவின் மீட்சியிலும் செல்லுமானால்

உங்களதுபழையநண்பர்,எனதுதந்தைலசந்தவிக்ரமதுங்கவிற்குஒருபோதும் நீதிகிடைக்கப் போவதில்லை.

உயர்ந்தநேர்மையுடன்
அகிம்ஷா விக்ரமதுங்க.

தமிழில். வி.சிவலிங்கம்

Author: theneeweb