கிளிநொச்சியில் ஐந்தாவது சர்வதேச இந்து இளைஞர். முத்தமிழ் சங்க நிகழ்வும்

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் 5ஆவது இந்து மாநாடும் முத்தமிழ் சங்கம நிகழ்வும் இன்று கிளிநொச்சியில் 2019.08.18 சிறப்பாக இடம்பெற்றது.

காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து சைவப் பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமாகி கூட்டுறவு மண்டபத்தைச் சென்றடைந்து அங்கு சிறப்பான நிகழை்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சான்றோர்கள், தென்னிந்திய குரு மகாசன்னிதானங்கள், ஈழத்து ஆதீன குரு முதல்வர்கள் உள்ளிட்ட பல்தரப்பட்ட அறிஞர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளமையும், முத்தமிழ்ச் சைவ நிகழ்வுகள் அரங்கை அலங்கரிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் சைவச் சான்றோர்களாகளுக்கான கெளரவத்தினை இவ்வான்டு பேராசிரியர் மா.வேதநாதன் (முன்னாள் தலைவர் இந்துநாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)

வைத்தியர்.
ஆறுமுகம் அரசக்கோன் JP,
மன்னார்.

திருமதி. செல்வராணி சோமசேகரம்பிள்ளை,
(ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர், கிளிநொச்சி)

திருமதி
பரமேஸ்வரி சிவநொளிபாதம்,
(ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர், கிளிநொச்சி) ஆகிய நால்வரிற்கு வழங்கிக் கெளரவப்படுத்தப்பட வுள்ளனர் மேலும் சைவசமயச் செயற்பாட்டில் தம்மை அர்ப்பணித்து முன்மாதிரியாக செயலாற்றும் நல்லாசான்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயர் விருதாகிய “சைவவித்யாபிமாணி” விருதினை இவ்வாண்டு

செல்வி இராசமலர் இராமலிங்கம்,
ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்,
வலயக்கல்வி அலுவலகம்,
தென்மராட்சி.

திருமதி சிவமூர்த்தி கிருபாலினி,
ஆசிரியர்,
கிளி/கனகாம்பிகைக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை.

திருமதி கோணைஸ்வரன் பிறெமாவதி,
ஆசிரியர்,
கிளி/இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலை.

திருமதி ஜெயாநிதி சித்திரா,
ஆசிரியர்,
கிளி/முருகானந்தாக் கல்லூரி.

திருமதி S. நிலோஜினி,
இந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்,
மாவட்ட செயலகம் , கிளிநொச்சி.

மேலும் கல்வி புகட்டல் செயற்பாட்டில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஆசான்களுக்கு வழங்கப்படும் “வித்யாபதி” விருதினை ஆசிரியர்களான
திருமதி செல்வராஜேஸ்வரன் சசிகலா,
கிளி/கிளிநொச்சி இந்துக்கல்லூரி.

திருமதி
முருகானந்தன் இராஜேஸ்வரி,
கிளி/ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை.

திரு. கணபதிப்பிள்ளை கனகலிங்கம்,
கிளி/கிளிநொச்சி இந்துக்கல்லூரி.

திரு.இராமச்சந்திரன் வினோதராஜ்,
கிளி /விநாசியோடை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை.

திருமதி. நந்தகோபன் சசுதர்சினி
கிளி/அக்கராயன் மகாவித்தியாலயம்.

திருமதி. ஜெயரட்ணம் கலைவாணி,
கிளி/புனித திரேசாள் பெண்கள் கல்லூரி.
ஆகிய அறுவரிற்கு வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

Share:

Author: theneeweb