நீரின்றி அழியும் நிலையில் சிறுபோக பயிர்ச்செய்கை – விவசாயிகள் கவலை

 

கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கையானது சில பிரதேசங்களில் நீரின்றி அழிவடையும் நிலையில் காணப்படுகிறது என பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் பெரியபரந்தன் எல்பி 1 பகுதியில் 50 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்கள் நீர் போதாமையினால் அழிவடையும் நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அவர்கள் அழிவடையும் தருவாயில் உள்ள வலயல்களுக்கு மீண்டும் இரணைமடுவிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என அறிவித்து திறந்து விடப்பட்ட போதும் தங்களது வயல்களுக்கு நீர் கிடைக்கப்பெறவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்
ஆனால் திறந்து விடப்பட்ட நீர் அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களில் தேங்கி நிற்பதாகவும், விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்..

இதேவேளை கிளிநொச்சி இரணைமடுகுளத்தில் நீர் ஒன்பது அடிக்கு குறைவாக இருப்பதனால் கிளிநொச்சிக்கான குடிநீரை வழங்குவதிலும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb