தலைவர் பதவியில் இருந்து ரெஜினோல்ட் குரே இராஜினாமா

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே தனது பதிவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி அவர் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author: theneeweb