இராணுவ தளபதி நியமனம் – அரச தலைவரின் இறையாண்மைக்கு உட்பட்டது

இராணுவ தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை அரச தலைவரின் இறையாண்மைக்குட்பட்ட தீர்மானமாகும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த அறிக்கையில், இலங்கை இராணுவத் தளபதியின் நியமனமானது அரச தலைவரின் இறையாண்மைக்குட்பட்ட தீர்மானமாகும்.

இலங்கையில் பொதுச் சேவை பதவியுயர்வுத் தீர்மானங்கள் மற்றும் உள்ளக நிர்வாக செயன்முறைகளை பாதிக்கும் வகையிலான வெளிநாட்டு நிறுவனங்களின் முயற்சிகள் தேவையற்றவையும், ஏற்றுக்கொள்ள முடியாதவையுமாகும்.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சில இருதரப்பு பங்காளர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் இந்த நியமனம் குறித்த அக்கறையுள்ளதொரு நிலையை குறிப்பிடுவது வருந்தத்தக்கதும், சர்வதேச சமூகத்தின் அனைத்து பொறுப்புள்ள உறுப்பினர்களும் முன்வைக்கும் இயற்கை நீதிக்கான கொள்கைகளுக்கு முரணானதுமாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb