ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவு கோட்டாபயவுக்கு…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கத் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் காலத்தில் எதையும் சாதிக்கக்கூடிய வல்லமை படைத்த உறுதியானதொரு நாட்டின் தலைவர் மூலமே தமிழ் மக்களின் வரலாற்றிலும் மாற்றங்களை உருவாக்க முடியும்.

எனவே. இந்த உறுதியான நிலைப்பாட்டில் இருந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க தீர்மானித்துள்தாக சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேநேரம், குறித்த சந்திப்பு தனக்கு நம்பிக்கையளிப்பதாகவும் அவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb