உள்ளுராட்சி முற்றத்தை உருவாக்குவோம் – கரைச்சி பிரதேச சபையில் தீர்மானம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உள்ளுராட்சி முற்றத்தை உருவாக்குவோம் எனும் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் பிரமந்தனாறு வட்டார உறுப்பினரான செல்வராணி என்பவரால் குறித்து பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த பிரதேச சபை அமர்வின் போது கொண்டுவரப்பட்ட இப் பிரேரணையானது பிரதேச சபையினால் தீர்க்கப்பட முடியாத மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதனை நோக்காக கொண்டு, தெரிவு செய்யப்பட்ட ஓர் நாளில் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்டு மக்களின் தேவைகள் இனம் காணப்பட்டு அன்றையதினம் உரிய திணைக்கங்களின் சேவைகைளை மக்களுக்கு ஒரு நாளில் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஒரு மாபெரும் நடமாடும் சேவையாக உள்ளுராட்சி முற்றம் எனும் பெயரில் உருவாக்கப்படல் வேண்டும் எனக் குறித்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சபையில் அனைத்து உறுப்பினர்களும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டு பிரேரணையை நிறைவேற்றியுள்ளனர்.

Share:

Author: theneeweb