கிளிநொச்சி வட்டக்கச்சியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடப்படுகின்றன

கிளிநொச்சி வடக்கச்சி கிருஸ்ணர் ஆலயத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைகப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் படையினர் தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.

இன்று 21-08-2019 காலை முதல் பொலீஸ், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து இத்தேடுதல் நடவடிக்கையின் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் இத்தோடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

பொலீஸாருக்கு கிடைத்து இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த இடத்தில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறித்த இடத்திற்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீடு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:

Author: theneeweb