இலங்கையிலிருந்து சென்ற 6 பயங்கரவாதிகள் இந்திய நகரங்களில்..! புலனாய்வுத்துறை எச்சரிக்கை

இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக 6 பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுறுவியுள்ளதாக கிடைக்க பெற்ற புலனாய்வு தகவல்களையடுத்து திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தேவஸ்தானத்திற்கு முன்பாக ஆயுதம் தரித்த காவற்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புலனாய்வு தகவலையடுத்து, தமிழகத்தின் பேருந்து நிலையங்கள், தொடருந்து நிலையங்கள், மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனிடையே, பாகிஸ்தானியர் உட்பட இலங்கையிலிருந்து ஊடுறுவியதாக கூறப்படும் 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இளைஞரை தேடி விஷேட விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுதவிர, தமிழகத்தின் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல நகரங்களில் இரண்டாவது நாளாகவும் சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Author: theneeweb