இந்தியாவுக்கும் பாலாலிக்கும் இடையிலான விமான சேவைகள் இந்தாண்டு இறுதியில்..!

இந்தியாவுக்கும் பாலாலிக்கும் இடையிலான விமான சேவைகள் இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மூதூரில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தி திட்டமொன்றில் பங்கேற்றபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

கீழ் மல்வத்து ஓயா தந்திரி மலை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வில்பத்து வனஜீவராசிகள் வலயத்திற்கு இதனால் பாதிப்பு ஏற்படாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீர்த்தேக்கத்தினால் நீரில் மூழ்கும் தந்திரிமலை கிராமத்திற்குப் பதிலாக பிரதேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

Author: theneeweb