சிறப்பாக இடம்பெற்றது கிளிநொச்சி திருக்குறல் பெருவிழா

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்க அமைய வடக்கு மாகாண ஆளுநரின் நெறிப்படுத்தலில் கிளிநொச்சியில் திருக்குறல் பெருவிழா 2019 சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இன்று 26 காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்றலில் திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து ஆரம்பமான ஊர்வலம் கூட்டுறவாளர் மண்டபத்தை சென்றடைந்து அங்கு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரின் தலைமையில் திருக்குறல் பெருவிழா நிகழ்வுகள் இடம்பெற்றன.

ந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத்தின் வாழ்நாள் தலைவர் வே இறைபிள்ளை கலந்துகொண்டார். அத்தோடு மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) ந.திருலிங்கநாதன், கரைச்சி பிரதேச செயலர் த முகுந்தன்,யாழ் பல்லைகழக அரசறிவியல்துறை தலைவர் கலாநிதி கே.ரி. கணேசலிங்கம்,கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலை விரிவுரையாளர் கு.பாலசணமுகம்,முனைவர் மனோண்மனி சண்முகதாஸ் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறபுரையாற்றினர்.

Author: theneeweb