தோழர் கைலாஷை (மாதவன்)

ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்தவருமான தோழர் கைலாஷை (மாதவன்) இழந்து விட்டோம்.

1970 களில் பிற்பகுதியிலிருந்து ஈழப்போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியவர் கைலாஷ். கன்னாட்டிப் பண்ணைக்காலத்திலிருந்து மிகப் பின்தங்கிய மக்களுக்கு அவர் செய்த பணிகள் நிறைய.
தோழர் ரட்ணாவோடும் (இரத்தினசபாபதி) அவருடைய சிந்தனைகளோடும் நெருக்கமாக இருந்தவர்.
அமைதியும் அன்பும் தோழமை உணர்வும் நிரம்பிய கைலாஷ் பற்றிச் சொல்வதற்கு ஏராளம் சங்கதிகளுண்டு.

ஈழம், இந்தியா என இரண்டு தளங்களிலும் பணியாற்றிய கைலாஷூடன் பணியாற்றிய, பயணித்த நினைவுகள் எழுகின்றன.

1990 இல் ஈரோஸ் இயக்கம் செயற்படமுடியா நிலை உருவாக்கப்பட்ட பிறகு லண்டனுக்குச் சென்ற கைலாஷ், பின்னர் அங்கேயே இருந்தார். நேற்று (24.08.2019) அவரை இழந்து விட்டோம் என்று நண்பர்கள் தெரிவித்தனர்.

துயரம் மூடும் இக்கணத்தில் உங்கள் நினைவுகள் விரிகின்றன தோழரே…

Share:

Author: theneeweb