வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு அழைப்பு

சர்வதேச காணாமல் போனோர் தினமான 30ம் திகதியன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இன்று வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், சர்வதேச காணாமல் போனோர் தினமான 30.08.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு வடக்கு கிழக்கு இணைந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனைப்பகுதியிலும், வவுனியா மாவட்டத்தில் பன்றிகெய்தகுளம் விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி ஓமந்தை சோதனை சாவடியில் முடிவடையும். இப்போராட்டத்திற்கு பொது மக்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், சமூக சேவை ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் இளைஞர்கள், யுவதிகள் அனைவரும் எமது போராட்டத்திற்கு வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

விமர்சனம் செய்யும் போராட்டமாக இதை யாரும் கொச்சைப்படுத்தாமல், எமது போராட்டத்திற்கு வலுவூட்டி எமது உறவுகளிற்கான நீதிக்காக தேடி செல்லும் போராட்டத்தினை மிகவும் உணர்வு பூர்வமான முறையில் எடுத்துச்செல்ல அனைவரையும் கலந்து  கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என மேலும் தெரிவித்தனர்.

Share:

Author: theneeweb