திணைக்களங்களின் அசமந்தம் காரணமாக கிளிநொச்சியில் 24 வீதிகளின் அபிவிருத்தி தடைப்படும் நிலை

நெடுஞ்சாலைகள்,வீதி அபிவிருத்தி, மறறும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் கடந்த 09-04-2019 திகதியிடப்பட்டு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேசசத்தில் உள்ள 24 வீதிகளை புனரமைப்புச் செய்வதற்கு மதிப்பீடுகளை அனுப்பி வைக்குமாறு கோரிய கடிதம் அனுப்பட்டு இன்று வரை அதற்கான எவ்வித பதிலும் அனுப்படாதுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கரைச்சி பிரதேச சபையிலுள்ள சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கோரிக்கை கடிதத்திற்கு அமைவாக நெடுஞ்சாலைகள்,வீதி அபிவிருத்தி, மறறும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் 09.04.2019 திகதி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலவலகத்திற்கு 24 வீதிகளின் மதிப்பீடுகளை கோரிய கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அதற்கமைவாக பிரதம செயலாளர் அலுவலகம் 11.07.2019 திகதி வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளாருக்கு வீதிகளின் செலவு மதிப்பீடுகளை காலந்தாழ்த்தாது அனுப்பி வைக்குமாறு கோரி கடிதம் அனுப்பியுள்ளனர். இதன் பின் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் கிளி நொச்சி பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கு 23-07-2019 திகதியில் 24 வீதிகளின் அண்ணளவான மதிப்பீடுகளை அனுப்பி வைக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கமைவாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் 25-07-2019 திகதியில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளருக்கு தலைப்பிட்டு வீதிகளின் செலவு மதிப்பீடுகளை விரைவாக அனுப்பி வைக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆனால் இன்று இச் செய்தி எழுதப்படும்வரை (29-08-2019) கரைச்சி பிரதேச சபையினரால் குறித்த 24 வீதிகளுக்குமான அண்ணளவான செலவு மதிப்பீடுகள் அனுப்பி வைக்கப்படவில்லை . அரசியல் காரங்களுக்காக கரைச்சி பிரதேச சபை வீதிகளுக்கான செலவு மதிப்பீடுகளை மேற்கொள்ளவில்லை.கிளிநொச்சி அதிகளவான உள்ளுர் வீதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ள போது இவ்வாறு வருகின்ற வாய்ப்புக்களை அரசியல் காரணங்களுக்காக தட்டிக் கழிப்பது மிகவும் மோசமான செயல் என பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

Author: theneeweb