கோட்டாபயவின் ஊடக பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ ஊடக பேச்சாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கெஹலிய ரம்புக்வெல மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஊடக பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுஜன முன்னணியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் நளீன் குமார நிஷ்ஷசங்க வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: theneeweb