புதுக்கடை நீதவான் நீதிமன்ற பகுதியில் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

இன்று (01) தொடக்கம் செப்டெம்பர் 10 ஆம் திகதி வரை புதுக்கடை நீதவான் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் நடாத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நீதிமன்ற உத்தரவானது, ´சிங்கள ஜாதிக பலமுலுவ´ என்ற அமைப்பின் ஏற்பாட்டாளர் வண. மெடில்லே பஞ்ஞாலோக தேரர் மற்றும் ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் வண. இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட தேரர்களுக்கு வௌியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், பேரணிகள் நடாத்தப்படும் போது சட்டரீதியானதாகவும் மற்றும் அமைதியானதாகவும் நடாத்திச் செல்ல தடை இல்லை எனவும், கலகம், குழப்பத்தை ஏற்படத்தும் எவ்வித செயற்பாடுகளுக்கும் அனுமதி இல்லை எனவும், பொதுமக்களுக்கு வாகனங்களுக்கு தடை, விபத்து, தொந்தரவு ஏற்படும் வகையில் பேரணி நடாத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும், அமைதியைக் சீர்குலைக்கும் சிறியளவிலான செயற்பாடுகளேனும் இடம்பெறக்கூடாது எனவும் இந்த நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளில் கலந்துக் கொள்ளும் அனைத்து மக்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb