பொது இடங்களுக்கு செல்லும் முஸ்லிம் பெண்களுக்கு உலமா சபையின் அறிவிப்பு

முகத்திரை அணிந்து பொது இடங்களுக்கு செல்லும் முஸ்லிம் பெண்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த சபை அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

ஆடைச் சுதந்திரம் என்பது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும் .

எமது நாட்டு யாப்பின் பிரகாரம் அனைவருக்கும் அந்த சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் அவசர கால சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டதுடன் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது .

எவ்வாறாயினும் நாட்டில் தற்போது அவரசரகால சட்டம் நீக்கப்பட்டிருப்பினும் பயங்கரவாதம் குறித்த அச்சம் இன்னும் மக்கள் மத்தியில் இருந்து அகலவில்லை.

எனவே பொது இடங்களுக்கு செல்லும் போது முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிந்து செல்வதால் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

ஆகவே இந்த விடயத்தில் விழிப்புடன் செயற்படுமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: theneeweb