ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் காலந்தாழ்த்த முயற்சி- அநுர குமார

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாமல் அதனை காலந்தாழ்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த முன்னணியின் மாகாணங்களுக்கான பிரதிநிகளுடன் இன்று கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதனை நிறுத்தவும் அல்லது அதில் காலதாமதத்தை ஏற்படுத்துவதற்கும் பல்வேறு மட்டங்களில் சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நாட்டை சிறந்ததொரு பாதைக்கு இட்டுச்செல்வதற்கான வாய்ப்பு குறித்த தேர்தலின் ஊடாக ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்களில் ஏனைய கட்சிகளை போன்று மக்கள் விடுதலை முன்னணியும் சிறந்த வேட்;பாளர்களை களம் இறக்கியது.

எனினும் தேசிய அரசியலில் கிராம மற்றும் பிரதேச மட்டத்தில் ஏற்புடைய வெற்றி ஒன்றை பெற்றுக்கொள்ளவில்லை.

ஐக்கிய தேசிய கட்சிக்கு தாம் ஒருபோதும் வரியை அதிகரிக்குமாறு மத்திய வங்கியில் ஊழல் செய்யுமாறும் கூறவில்லை.

ஐக்கிய தேசிய முன்னணியை பொருத்தமட்டில் கட்சியின் உறுப்பினர்களுக்கும் தலைவருக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

குறித்த கட்சியின் தலைவர் ஆதரவாளர்களின் விருப்பதற்கு எதிராக தன்னுடைய நிலைப்பாட்டையே செயற்படுத்துகின்றார்.

இதேபோன்றதொரு நிலையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினருடைய நிலையும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Author: theneeweb