சிலர் பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர்

பாதுகாப்பான மற்றும் ஒழுக்கம் மிக்க நாட்டை உருக்குவதாக தான் தெரிவித்த கருத்து தொடர்பில் சிலர் பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டை மீண்டும் ஒழுக்கம் மிக்கதாக மாற்றக்கூடிய தலைவர் ஒருவரை முன்னிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Author: theneeweb