கலப்பு பொருளாதார முறை நாட்டுக்கு பொருத்தமானதாகும்

நாட்டின் செல்வத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழிமுறையாக முதலாளித்துவ பொருளாதார முறை கருத்தப்பட்டாலும் வளங்களை பகிர்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் ஏழை மக்கள் பொருளாதார செயற்பாடுகளிலிருந்து தூரப்படுத்தப்படுகிறார்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் ஹஸ்திராஜகம மாதிரி கிராமத்தை திறந்து வைக்கும் நிகழ்விலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

முதலாளித்துவ பொருளாதாரத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் பொருளாதார முறையின் ஊடாக திரட்டப்பட்ட செல்வத்தை சோசலிஸ முறையின் ஊடாக பிரஜைகளுக்கு வழங்கக் கூடிய கலப்பு பொருளாதார முறைமை ஏற்படுத்தப்படுவது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb