ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியே ஆட்சி அமைக்கும் …

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள்சார்பு முற்போக்கு முன்னணியை நிறுவி, 2020இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிபா பண்டாரநாயக்க குமாரணதுங்க மற்றும் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, தனது 5 வருட ஆட்சி காலத்தில் பாரிய விமர்சனங்களை ஏற்படுத்திய மத்திய வங்கியின் ஊழலுடன் தொடர்புடையவர்கள் நாட்டின் அரசியல் செயற்பாடுகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் தூய்மையானவர் போல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகிறார் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில், மேலும் பல விடயங்கள் எதிர்வரும் நாட்களில் வெளியாகும்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை விட உயர் அதிகரிகளுக்கு அதன் பொறுப்பாளிகள் என்ற வகையில் நீதிமன்றில் முன்னிலையாவதற்கான அறிஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் தொடர்பான அறிக்கை பிரதமரினால் தயாரிக்கப்பட்டு அது நாடாளுமன்றத்தில் பகிர்ந்தளிக்கப்படாமை காரணமாக அந்தத் தேர்தல் நடத்தப்படவில்லை.

எனவே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாதமைக்கு பிரதமரே முதலாவது பொறுப்பாளர் என்றும் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

Share:

Author: theneeweb