தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க ஜனாதிபதி இணக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்குவதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இதனை தெரிவித்துள்ளார்.

தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் சிலரை எதிர்வரும் தினத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி ஜனாதிபதியிடம் சாட்சியம் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சாட்சியம் பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதியால் இதுவரை திகதி ஒன்று அறிவிக்கப்படவில்லை என பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் கடந்த ஜூலை மாதம் 06 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாட்சியம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author: theneeweb