ஶ்ரீ.சு.கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதாக அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரால் இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடக பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb