வீட்டை மர்ம கும்பல் அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓட்டம்

கோண்டாவில், அன்னுங்கை பகுதியில் உள்ள வீடு ஒன்றினை மர்ம கும்பல் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (05) இரவு 9.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கோண்டாவில், அன்னுங்கை பகுதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டிற்கு இரு மோட்டார் சைக்கிகளில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் முகங்களை மூடியவாறு வந்துள்ளனர்.

அவர்கள் வீட்டின் ஜன்னல்களை அடித்து நொறுக்கியதுடன் வீட்டில் தரித்து நின்ற முச்சக்கர வண்டியையும் அடித்து நொறுக்கிவிட்டு வீட்டில் இருந்தவர்களை வாள்களை காட்டி அச்சுறுத்தியதுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

வீட்டுக்கரரின் அவலக் குரல் கேட்டு அப்பகுதி இளைஞர்கள் குறித்த மர்மக் கும்பலை துரத்திய போதும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Author: theneeweb