37,727 மில்லியன் ரூபா பணத்தை மீள செலுத்தாத வியாபார நிறுவனங்கள்

மக்கள் வங்கியில் கடன் பெற்ற 10 வியாபார நிறுவனங்கள் சுமார் 37,727 மில்லியன் ரூபா பணத்தை மீள செலுத்த தவறியுள்ளதாக கோப் குழுவுக்கு தெரியவந்தது.

மக்கள் வங்கியின் அதிகாரிகள் நேற்று (05) கோப் குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கிய போதே இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

இதன்போது, கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி இது தொடர்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

´கடந்த 31 மாதங்களில் கடன்தொகை மீளசெலுத்த தவறிய பணம் 20,428 மில்லியன்களாக அதிகரித்துள்ளது. இது 2016 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மொத்த செயல்படாத கடன் தொகை மற்றும் கடன்களில் 100 சதவீதத்திற்கும் அதிகமாகும்´ என கணக்காயவாளர் நாயகம் தெரிவித்தார்.

இதில் என்ன பிரச்சினை என்றால், கடனை மீள செலுத்தாத முதல் 10 பேரினதும் கடன் தொகை 32,277 ரூபாவாகும். குறிப்பாக இது 219 மடங்கு பெரிய தொகையாகும்.

முதல் 10 பேரும் ஒரே மாதிரியானவர்கள். நான் ஏற்கனவே கோப் குழுவில் உறுப்பினராக இருந்தபோது பார்வையிட்ட பட்டியல் இங்கே உள்ளது. சொத்து மீட்கப்பட வேண்டும் என சொன்னீர்கள். இந்த கடன்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளன.

சி.எம்.எல் கட்டுமான நிறுவனத்தின் பணிப்பாளர், மக்கள் வங்கியில் கடமையாற்றியுள்ளார். அவர் வங்கியின் பணிப்பாளர் சபையிலும் இருந்துள்ளார்.

அவர் மக்கள் வங்கியில் இருந்த போது வோகஸ் சி.எம்.எல் குழுமத்தின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

அவ்வாறு கடமையாற்றியிருந்தால் வோகஸ் சி.எம்.எல் குழுமத்திற்கு வழங்கப்பட்ட கடன் மீள செலுத்தப்படவில்லை என்பதுடன், 2019 ஒகஸ்ட் 27 ஆம் திகதி நிலுவைத் தொகையாக 3,946 மில்லியன் ரூபா இருந்தது. அதாவது கடன் தொகையில் 85 வீதமமே அதுவாகும். நம்பகமான பிணையாளர் இன்றியே இந்த கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது´ என்றார்.

Share:

Author: theneeweb