தனது முடிவிலிருந்து மில்லிமீற்றர் அளவேனும் பின்வாங்க போவதில்லை- அமைச்சர் சஜித்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது முடிவிலிருந்து மில்லிமீற்றர் அளவேனும் பின்வாங்க போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை சந்திக்கும் நிகழ்வுவொன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்ந நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் தவிசாளரான கபீர் ஹாசிம் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb