கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய மீண்டும் உறுதி

கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை மீண்டும் உறுதி செய்யும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இன்று இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது மாநாட்டிலேயே இவ்வாறு உறுதி செய்யும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று பிற்பகல் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரனமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமது கட்சியின் ஆதரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Author: theneeweb