சஜித் பிரேமதாசவின் ஆதரவு பேரணிகள் மேலும் 4 மாவட்டங்களில்…

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க கோரி, ஆதரவு பேரணிகள் மாத்தளை, புத்தளம், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், ஐக்கிய தேசிய கட்சியானது ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை, எந்தவொரு பேரணிகளையும் நடத்த கூடாது என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் இவ்வாறு பதிவாகியுள்ளன.

Share:

Author: theneeweb