மத்திய வங்கி பிணை முறி மோசடி செய்த அனைவரும் நீதிமன்றம் செல்வது உறுதி

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய அனைவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

பாண் மற்றும் மாவின் விலையை அதிகரித்த அரசாங்கத்திற்கு பெருந்தோட்டத்தொழிலாளர்களின் வேதனத்தை அதிகாரிக்க இயலாது போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் அனைவரினதும் ஏகமானதான தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார்.

ஆகவே அவரது வெற்றிக்காக அனைவரும் இணைந்து பணியாற்றவுள்ளதாக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

இந்தநிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷ, தமது ஆட்சியின் ஊடாக அரசியல் ஸ்;த்தீரத்தன்மையை ஏற்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்கான திடமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியாளர்கள், விவாசாயிகள் ஆகியோருக்கு முக்கியத்துமளித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திடடத்தை முன்னெடுத்து செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அங்கிகரத்தமைக்கு தான் அனைவருக்கும் நன்றி கூறுவதாகவும் எதிர்காலத்தில் நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கும் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குதவற்கும் மக்கள் தம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share:

Author: theneeweb