உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த அவுஸ்திரேலிய நாட்டவர்களுக்கு இழப்பீடு..!

ஏப்ரல் 21 மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமது நாட்டு பிரஜைகளின் உறவினர்களுக்கு உதவ அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்வந்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி தமது குடும்ப உறுப்பினர்களை இழந்த அல்லது காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.’

இதற்கமைய பாதிக்கப்பட்டவர்கள் 75 ஆயிரம் அவுஸ்த்திரேலிய டொலர்களை நட்டஈடாக கோரமுடியும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இதன் பெறுமதி இலங்கை ரூபாவில் 90 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறுன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி சாட்சி வழங்கவுள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி இதனை தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் முற்பகல் 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் சாட்சி வழங்க ஜனாதிபதி விருப்பம் வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Author: theneeweb