அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தின் விடுதி திறப்பு!

நாடளாவிய ரீதியில் 9 ஆயிரத்து 64 பாடசாலைகளில், 18 ஆயிரம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கென மொத்தமாக 65 ஆயிரம் மில்லியன் ரூபா  கல்வியமைச்சியினால் ஒதுக்கப்பட்ட  சுமார் ஒன்பது மில்லியன் ரூபா நிதியில் கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்திட்காக   புதிதாக அமைக்கப்பட்ட  ஆசிரியர் விடுதி இன்று திறக்கப்பட்டது

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தில் சுமார் ஒன்பது மில்லியன் ரூபா செலவில்  அமைக்கப்பட்ட  ஆசிரியர் விடுதி கட்டடத்தினை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விடுதியை திறந்துவைத்தார்.

பள்ளி முதல்வர் மதுரநாயகத்தின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி வலையக் கல்வி பணிப்பாளர் கமல்ராஜன் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.

Share:

Author: theneeweb