கிளிநொச்சிக்கு வருகை தந்த சஜித் பிரேமதாச அவர்கள் நான்கு கிராமங்களிற்கான வீடுகளை கையளித்துள்ளார்

கிளிநொச்சியில் வீடு இல்லாதவருக்கு வீடு எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி கோரக்கன்கட்டு கிராமசேவகர் பிரிவில் ஓதிய நகர் மற்றும் நாகபுரம் என இரண்டு கிராமங்களும் புதுமுறிப்பு கிராமசேவகர் பிரிவில் சோலை நகர் கிராமமும், கனகாம்பிகைக்குளம் பகுதியில் எல்லாளன் சோலை நகர் கிராமத்திலும் சுமார் 5 இலட்சம் பெறுமதியான 51 வீடுகள் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாசா அவர்களினால் கையளிக்கப்பட்டது.

வீடுகள் கையளிக்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவடட முகாமையாளர்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.

Author: theneeweb