கடல் மாரக்கமாக இந்தியா செல்ல முற்பட்ட இளைஞன் கைது..!

சட்ட விரோதமான முறையில் இந்தியாவுக்கு சென்ற இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவரை தமிழக காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞர் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவர் ராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்;டவர் வவுனியாவைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அவர் இந்தியாவுக்கு பயணித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது தொடர்பில் அவரிடம் தொடர்ந்தும் தமிழக காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இலங்கை கடற்ரப்பரல் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை, கச்சத்தீவு கடற்பரப்பில் அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், கடந்த வாரம் ராமேஷ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கச்சத்தீவு கடற்பரப்பில் படகு மூழ்கிய நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb