பிரியா நடேசலிங்கம் குடியுரிமை விவகாரத்தில் புதிய திருப்பம்….!

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள பிரியா – நடேசலிங்கம் குடும்பத்தின் விவகாரம், அவுஸ்திரேலிய தேசிய நலன் சார்ந்த விடயமாக மாறி இருப்பதாக, அந்த நாட்டின் எதிர்கட்சியான தொழில்கட்சி தெரிவித்துள்ளது.

தொழிற்கட்சியின் பிரதமர் மூலோபாயவியலாளரும், முன்னாள் குடிவரவுத்துறை அமைச்சருமான டொனி பர்க் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிலோயிலா நகரில் நீண்டகாலமாக வசித்து வந்த பிரியா, நடேசலிங்கம் தம்பதிகளும், அவர்களது 4 வயதான கோபிகா மற்றும் 2 வயதான தருணிகா ஆகிய இரண்டு அவுஸ்திரேலியாவில் பிறந்த குழந்தைகளும் நாடுகடத்தப்படவுள்ளனர்.

அவர்களை நாடுகடத்தி விமானத்தில் ஏற்றி அனுப்பியபோதும், இறுதிநேர நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த பயணம் இடைநிறுத்தப்பட்டது.

தற்போது அவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்கி இருந்த பிலோயிலா நகரில் உள்ள மக்களே குறித்த குடும்பத்தினரை நாடுகடத்த வேண்டாம் என்று வலியுறுத்துகின்ற நிலையில், அவர்கள் அந்த நகருக்கு தேவையானவர்கள் என்று கருதி நாட்டிலேயே தங்க அனுமதிக்க வேண்டும் என்று டொனி பர்க் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb