ஜனாதிபதி முறைமையை ஒழிக்க மீண்டும் அதிகாரத்தை வழங்குங்கள்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியாது போனதாகவும் ஆனால் அடுத்துவரும் ஐந்து வருடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் நிச்சயம் அந்த ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற மும்மொழி பயிற்சியாளர்களுக்கு நியமணம் வழங்கும் நிகழ்வில் பிரதமர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் ´அமைச்சர் மனோ கணேசன் பாரிய செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார். அந்த வேலைத் திட்டம் பகிரங்கமாக தெரிவதில்லை. ஈஸ்டர் ஞாயிற்று குண்டுவெடிப்பு இடம்பெற்ற போது நாடு பிளவுபடவில்லை. அப்போது அனைவரும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை கண்டித்தனர்.

ஆனால் எவரும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கவில்லை. நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஒப்புக் கொண்டோம். எனவே அதனை செய்ய அர்பணிப்புடன் உள்ளேன்.

நிறைவேற்று ஜனாதிபதி பதவி ஒரு கட்சியாக உருவாக்கப்பட்டது. அதை ஒழிக்க ஒப்புக் கொண்டாலும் எமது கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை.

எனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை உடனடியாக ஒழிப்பதற்கு மீண்டுமொரு முறை அதிகாரத்தை வழங்குங்கள்´ என்றார்.

Share:

Author: theneeweb