8 அமைச்சர்களுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

2018 – 2019 வருடங்களுக்கான சொத்துக்கள் பொறுப்புக்களை அறிவிக்காத 8 அமைச்சர்களுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனத்தினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நவீன் திஸாநாயக்க, ஹரீன் பெர்ணான்டோ, மனோ கணேசன், எம்.எச்.ஏ.ஹலீம், அகில விராஜ் காரியவசம், ரவீ கருணாநாயக்க, கயந்த கருணாதிலக மற்றும் சஜித் பிரேமதாச போன்ற அமைச்சர்களுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிவிப்பை ஜுலை மாதம் 30 ஆம் திகதிக்கு முன் ஜனாதிபதியிடம் முன்வைக்காத 8 அமைச்சர்களுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் சங்கிதா குணரதன் அத தெரண செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb