முடங்கியுள்ள அரச நிறுவனங்களின் சேவைகள்…

இலங்கை அரச நிர்வாக சேவையாளர் மற்றும் பல்கலைகழக கல்விசாரா பணியாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச நிறுவனங்களின் சேவைகள் முடங்கியுள்ளன.
வேதன கொடுப்பனவு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நிர்வாக சேவை சங்கத்தினர் இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர.
இதன்காரணமாக குடிவரவு, குடியகல்வு, ஓய்வூதிய கொடுப்பனவு, ஆள் அடையாளத்தை பதிவு செய்தல் மற்றும் மோட்டார் போக்குவரத்து ஆகிய திணைக்களங்களின் நடவடிக்கைகளும் தற்காலிகமாக முடங்கியுள்ளனர்.
அதேநேரம் அடையாள அட்டையுடன் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைளும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு பெற்றுக்கொடுப்படாவிட்டால் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளதாக இலங்கை நிர்வாக சேவையாளர் சங்கத்தின் செயலாளர் ரோகன டி சில்வா தெரிவித்துள்ளார்.
வேதன கொடுப்பனவு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைகழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைகழக கல்வி சாரா ஊழியர்  ஒன்றியத்தின் ஊடக செயலாளர் சமன் காரியவசம் தெரிவித்தார்.
இதேவேளை 10 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இலங்கை சுகாதார பணியாளர்கள் இன்று நாடுதழுவிய ரீதியில் அனைத்து மருத்துவமனைகளிலும் 4 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுவருவதாக அந்த சங்கத்தின் செயலாளர் மஹிந்த குருகே தெரிவித்தார்.
இடம்மாற்றம், பதவி உயர்வு, பயிற்சியின் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்னிறுத்தியே இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுவருவதாக அந்த சங்கத்தின் பொது செயலாளர் மஹிந்த குருகே தெரிவித்தார்.
இதேவேளை, 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர் ஒருவர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
வைத்தியசாலையின் அடிப்படை வசதிகளில் நிலவுகின்ற குறைப்பாடுகள், சிற்றூழியர்கள் பாரபட்சமாக நடத்தப்படல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Share:

Author: theneeweb