49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)

49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி – கிளிநொச்சியில் எதிர்வரும் 2019 செப்ரெம்பர் 21, 22 சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் நடக்கவுள்ளது.  கிளிநொச்சி இரணைமடுச் சந்தியிலுள்ள பிராந்திய கால்நடை அபிவிருத்தி நிலைய மண்டபத்தில் (மத்திய வங்கியின் பிராந்தியக் காரியாலயத்துக்கு அருகில்) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தாயகத்தின் பல்வேறிடங்களிலிருந்தும் வருகின்றவர்களுடன் புலம்பெயர் தேசங்களின் கலை, இலக்கிய. சமூகச் செயற்பாட்டாளர்களும் பங்கேற்கின்றனர்.

கலை இலக்கியம், சம கால சமூகப் பிரச்சினைகள், போர், போருக்குப் பிந்திய காலச்சூழல், ஜனநாயக நிலவரம், பண்பாட்டு அசைவுகள், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் எனப் பல விடயங்களை உள்ளடக்கி நான்கு அமர்வுகளில் 16 தலைப்புகளில் பல்வேறு ஆளுமைகள் உரையாற்றுகின்றனர். தொடர்ந்து விரிவான உரையாடல்களும் விவாதங்களும் இடம்பெறும்.

இரண்டு நாள் அமர்வுகளிலும் பங்கேற்போருக்கான தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலந்து கொள்வதற்கு விரும்புவோர் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். அல்லது கீழே குறிப்பிடப்படும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

– ஏற்பாட்டுக்குழு

(49 இலக்கியச் சந்திப்பு)

Share:

Author: theneeweb