கௌதாரி முனையில் ஐந்து ஏக்கர் மணல் காணியை கொள்வனவு செய்துள்ளார் டக்ளஸ் எம்பி

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனையில் தனியாருக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் மனல் மேடுகள் கொண்ட காணியை பாராளுமன்ற உறுப்பினனர் டகளஸ் தேவானந்த கொள்வனவு செய்துள்ளார்.

கிளிநொச்சியை சேர்ந்த நொத்தாரிசு ஒருவரின் முன்னிலையில் ஆறு மாதங்களுக்கு முன் இக் கெள்வனவு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினரால் காணி உரிமையாளருக்குரிய முழுமையான பணம் வழங்கப்படவில்லை.

ஆரம்பத்தில் காணி உரிமையாளருடன் முகவர் ஒருவரின் ஊடாக தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன. மணல் அகழ்வதனை நோக்கமாக கொண்டு குறித்த காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் அழகான பிரதேசமான கௌதாரிமுனை சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் காணப்படுகிறது. அதற்கு பிரான காரணமே அங்குள்ள மணல் மேடுகளை. இதன் அழகை பார்வையிடுவதற்கு நாளாந்தம் நூற்றுக்கணக்கானவர்கள் கௌதாரி முனைக்கு வந்து செல்கின்றனர். எனவே கௌதாரிமுனையிலிருந்து மணல் அகழ்வது முற்றாக தடைசெய்யப்படல் வேண்டும் என சூழலியலாளர்கள் முதல் அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக தற்போது அங்கிருந்து மணல் அகழ்வது நீதிமன்றத்தினால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. பூநகரி மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பூநகரி பொலீஸார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் மேற்கொண்ட வழக்கின் காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது. வரும் 16 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றி் ல் வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Share:

Author: theneeweb