மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் பவள விழா

..மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் பவள விழா வியாழக்கிழமை [12.09.2019] காலை 10 மணிக்கு அதிபர் என்.முஹம்மட் ஷாபி தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கௌரவ அதிதிகளாக நகராத திட்டமிடல்,நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம்,கைத்தொழில்,வாணிப அலுவல்கள்,நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்ற,கூட்டுறவு அபிவிருத்தி,தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன்,கல்வி அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம்,வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்,கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்தோடு சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் ,கல்வி அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு பாடசாலை அதிபர்,பிரதி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோர் அழைப்பு விடுக்கின்றனர்.

[தகவல்-சிபாஸ்-1978 Batch]

Share:

Author: theneeweb