துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்கள் மருதமுனையில் கைது

2 கை துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்களை விசேட அதிரடிப் படையினர் மருதமுனையில் வைத்து கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து, கார் ஒன்றில் பயணம் செய்த நிலையில் மருதமுனை பெரிய நீலாவணை எல்லைப் பகுதியில் வைத்து இருவரும் இன்று (15) கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதான நபர்கள் தற்போது கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கைதான நபர்கள் பொலன்னறுவை, வெலிகந்தை பொலிஸ் பிரிவில் பணியாற்றுவதாக விசாரணையில் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

Share:

Author: theneeweb