52 ஆயிரம் வைத்தியர்களும், பொறியியலாளர்களும் நாட்டை விட்டு வௌியேறியுள்ளனர்

கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 52 ஆயிரம் வைத்தியர்களும், பொறியியலாளர்களும் நாட்டை விட்டு சென்றுள்ளமை பாரிய அழிவாகும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாணந்துறை, வாலான ஸ்ரீ விஜய சவுகத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தொழில் வல்லுனர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை தடுக்க நாட்டை நவீனமயப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் 52 ஆயிரம் வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக அவர் கூறினார்.

ஆகவே, இளைய தலைமுறையினர் பெரும்பாலும் நாட்டை விட்டு வெளியேறி அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு செல்ல முடிவு செய்கின்ற நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இப்போதாவது நவீனமயமாக்கலுக்கு பயப்படாமல் நமது நாட்டுக்குரியவற்றை கைக்கொண்டு தொழிநுட்ப உலகிற்குள் பிரவேசிப்பது அவசியம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb