சிறுபான்மை மக்கள் சார்பிலான ஜனாதிபதி வேட்பாளர் இதுவரை இல்லை…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகின்ற போதும், இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு யாரும் அவ்வாறான அறிவிப்பை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் இருந்தோ, மலையகத்தில் இருந்தோ இதுவரையில் எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது சுயாதீனக் குழுவோ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருப்பதாக தங்களுக்கு தெரியப்படுத்தவில்லை.

அதேநேரம், அரசியல் யாப்பின் படி, சுயாதீன குழு ஒன்றின் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற யாராக இருந்தாலும், அவர் முன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்.

அவ்வாறு அல்லாதவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் ஊடாகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb