கட்சி உறுப்புரிமை நீக்கம் தொடர்பில் இதுவரை அறிவித்தல் இல்லை – லக்ஸ்மன் யாப்பா

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி வேறு கட்சிகளுக்கு ஆதரவு வழங்கிய தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விளக்கங்களில் திருப்பதி ஏற்படவில்லை என்பதால் அவர்களின் கட்சி உறுப்புரிமையை தடை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநகாலில் நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

அவர்களின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டு, ஒழுக்காற்று விசாரணைகளையும் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனினும் ஒழுக்காற்று நடவடிக்கையோ அல்லது கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டதாகவோ இதுவரை தமக்கு எழுத்து மூலம் எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb